தமிழகத்தில் ஜூலை 31 வரை சிறப்பு ரயில்கள் ரத்து

தமிழகத்தில் ஜூலை 31 வரை சிறப்பு ரயில்கள் ரத்து

சென்னை: தமிழகத்தில் ஜூலை 31 வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மார்ச் 24 ல் துவங்கிய பொது ஊரடங்கு, வரும் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், வரும் 31 ம் தேதி வரை பஸ் போக்குவரத்து சேவைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி – செங்கல்பட்டு, மதுரை – விழுப்புரம், கோவை- காட்பாடி சிறப்பு ரயில்களும், அரக்கோணம் – கோவை இண்டர்சிட்டி ரயில்கள், கோவை மயிலாபுதுறை ஜன்சப்தி சிறப்பு ரயில், திருச்சி – நாகர்கோயில் சிறப்பு ரயில் ஆகியவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

(Visited 4 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *