இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு

புதுடில்லி: இந்தியாவில் நேற்று 2.63,533 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நிலையில் 4,22,436 பேர் குணமடைந்தனர்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,64,533 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,52,28,996 ஆக அதிகரித்தது.

நேற்று மட்டும், 4,22,436 பேர் நலமடைந்து வீடு திரும்பியதால், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,15,96,512 ஆகவும் உயர்ந்தது. தற்போது 33,53,765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில், 4,329 பேர் உயிரிழந்தனர். இதனால். இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,78,719 ஆகவும் அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் நேற்று மட்டும் 18,69,223 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 31,82,92,881 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Source : Dinamalar

(Visited 7 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *