Political News8 Videos

தங்கம் விலை தொடர்ந்து சரிவு: இன்றைய விலை நிலவரம்

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 குறைந்து, ரூ.39,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல் உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது. இதன் காரணமாக, தங்கத்தின் விலை படிப்படியாக உயா்ந்து வந்தது. ஆகஸ்ட் 7-ஆம் தேதி ரூ.43 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது. இதைத்தொடா்ந்து, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக விலை மீண்டும் […]

சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் அறிவிப்பு!

செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கவுள்ள நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 4 ஆம் கட்ட பொதுமுடக்க தளர்வுகளில் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது அதேநேரத்தில், ‘கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருக்கும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]

வண்ண தொலைக்காட்சி பெட்டி இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு

புதுடில்லி:வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் இறக்குமதியில், கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு, மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம், இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், வண்ண தொலைக்காட்சி பெட்டிகளின் இறக்குமதி கொள்கை, ‘சுதந்திரம்’ என்பதிலிருந்து, ‘கட்டுப்பாடுகள் கொண்டது’ என, திருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இறக்குமதிக்கான உரிமம் வழங்குவதற்கான நடைமுறை, பின்னர் தனியாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவை […]

மகாராஷ்டிராவில் ஒரேநாளில் 7,543 பேர் டிஸ்சார்ஜ்

ஆக 01, 2020 மும்பை:மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 7,543 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்றனர்.இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 158 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 320 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 22 ஆயிரத்து 118 ஆக அதிகரித்தது. இந்நிலையில் மஹாராஷ்டிராவில் […]

தமிழகத்தில் ஜூலை 31 வரை சிறப்பு ரயில்கள் ரத்து

தமிழகத்தில் ஜூலை 31 வரை சிறப்பு ரயில்கள் ரத்து சென்னை: தமிழகத்தில் ஜூலை 31 வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மார்ச் 24 ல் துவங்கிய பொது ஊரடங்கு, வரும் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், வரும் 31 ம் தேதி வரை பஸ் போக்குவரத்து சேவைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 31ம் தேதி […]

89 செயலிகளை ஸ்மார்ட் போனிலிருந்து நீக்க ராணுவத்தினருக்கு உத்தரவு

புதுடில்லி: 89 செயலிகளை தங்களது ஸ்மார்ட் போனிலிருந்து நீக்கிட வேண்டும் என ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய ராணுவம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: சமூக வலைதளங்கள் மூலம் நாட்டின் பாதுகாப்பு தகவல்கள் திருட்டு நடைபெற வாய்ப்பு உள்ளதால் இந்திய ராணுவம், தடை செய்யப்பட்ட செயலிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், ட்ரூகாலர் வி சாட், ஹலோ சாட், ஷேர் சாட், ஹைக், ஷேர் ஹிட், செண்டெர், யூசி பிரவுசெர், ஜூம், கேம் ஸ்கேன்னர், […]

செப்டம்பரில் நடக்க இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெற்று இருந்தாலும், அந்த உரிமையை இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு விட்டுக்கொடுப்பதாகவும், அதற்கு பதிலாக அடுத்த ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை பெற்றுள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், அதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு வழங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் […]